/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்
ADDED : ஜன 03, 2025 01:22 AM
அரசுப்பள்ளி மாணவர்களுக்குமூன்றாம் பருவ பாடநுால் வழங்கல்
ஓசூர், ஜன. 3-
கிருஷ்ணகிரி மாவட்டம்-, ஓசூர்- ஒன்றியம், பேடரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரண்டாம் பருவத்தேர்வு முடிந்து கடந்த டிச., 24 முதல் ஜன.,1 வரை 9 நாள் விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்தவுடனேயே மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. அதன்படி பள்ளிக்கு வருகைதந்த, 750 மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பள்ளி தலைமையாசியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.