/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : ஜன 01, 2025 01:43 AM
ஓசூர், ஜன. 1-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,ல் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில், இலவச சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மஞ்சுநாத், துணைத்தலைவர் அப்துல்கலாம் ஆகியோர், பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கி, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். கவுன்சிலர்கள் முகமது ெஷரிப், அப்துர் ரஹ்மான், கவுரம்மா, லிங்கோஜிராவ், சஞ்சனா, மாது, ஸ்ரீதர், துப்புரவு ஆய்வாளர் நடேசன், இளநிலை உதவியாளர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரை டவுன் பஞ்.,தில் துாய்மை பணியாளர்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது. டவுன் பஞ்.,தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பரிசு மற்றும் இனிப்பு, உணவு ஆகியவற்றை தணிகை கருணாநிதி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் வழங்கினர்.