/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரவில் அவசரகதியில் அமைத்த தார்ச்சாலை தரமில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

ADDED : பிப் 04, 2025 05:43 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, இரவில் அவசரகதியில் தார்ச்சாலை அமைத்துள்ளதை கண்டித்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க, கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, மிட்டாரெட்டிஹள்ளி பஞ்.,ல் மிட்டாரெட்டிஹள்ளி முதல், அப்பனஹள்ளிகோம்பை வரையிலான, 4 கி.மீ., சாலை, நெடுஞ்சாலை துறை சார்பில், கால-முறை புதுப்பித்தல்
திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், பழைய சாலையை சுரண்டி எடுக்காமல், பழைய சாலை மீது, இரவில் அவசரகதியில் தரமில்லாமல்
போடப்பட்டுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.மேலும், புதிதாக அமைத்த சாலையில், ஆங்காங்கே சாலை சரிந்தும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.எனவே, தரமில்லாமல் இரவு நேரத்தில் அமைத்த தார்ச்சாலையை அகற்றி, தரமான சாலை அமைக்க, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.