/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாக்கடை கால்வாயில் செல்லும் குடிநீர் குழாய் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்

ADDED : ஜூலை 25, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி, 1வது வார்டு ஷாப்ஜான் சாயபு தெருவிலுள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் சென்று, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதேபோல், அதிலிருந்து, 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயும் அதே சாக்கடை கால்வாய் வழியாகவே செல்கிறது. இந்த, 2 இரும்பு குழாய்களின் பல இடங்களில் ஓட்டை விழுந்து ஏற்கனவே சேதமாகி உள்ளது. தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாயில், 4 இடங்களில் ஓட்டை விழுந்து கடந்த, 20 நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், சாக்கடை கழிவு நீர் அந்த குழாய் உடைப்பு மூலமாக, குடிநீரில் கலக்கிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஏஜாஸ், 45, கூறுகையில், ''சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் அமைத்துள்ளதால், இரும்பு குழாயில் ஓட்டை விழுந்துள்ளது. புகார் தெரிவித்த பிறகு, நகராட்சி ஊழியர்கள் ஓட்டை விழுந்த குழாயை சரிசெய்யாமல், 2 இடங்களில் மட்டும் பிளாஸ்டிக் கவரை கட்டி விட்டு சென்றுள்ளனர். மேலும் உடைந்த குழாய் வழியாக சாக்கடை கழிவுநீரும் கலப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது,'' என்றார்.
இது குறித்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபுவிடம் கேட்டபோது, ''இது குறித்த புகார் வந்தது. அதை சரிசெய்ய உத்தரவிட்டிருந்தேன். ஆனால் ஊழியர்கள், பிளாஸ்டிக் கவரை சுற்றி கட்டியது தெரியாது. விசாரித்து, 2 குழாயையும் புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.