/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்
/
பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்
ADDED : ஜூலை 12, 2025 12:58 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று (12) பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் நடக்கிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற குறிப்பிட்ட கிராமங்களில் பொது வினியோக திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை சிறப்பு குறை தீர் கூட்டம் நடக்கிறது.
கிருஷ்ணகிரி தாலுகாவில் குட்டப்பட்டி, பர்கூர் பாகிமானுார், போச்சம்பள்ளி தொப்படிகுப்பம், ஊத்தங்கரை காரப்பட்டு, ஓசூர் சொக்கநாதபுரம், சூளகிரி துப்புகானப்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஒசபுரம், அஞ்செட்டி வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது. எனவே இதில் பொதுமக்கள் பங்கேற்று, குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன் பெறலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.