ADDED : டிச 17, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி, டிச. 17-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம், 347 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் வீதம், 12.21 லட்சம் ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, கலெக்டர் சரயு வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

