ADDED : ஆக 12, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்கள், 369 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பில் படித்து, தேர்வில் வெற்றி பெற்று, பணி நியமனம் பெற்ற, 5 பேருக்கு, கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.