/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொது சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
/
பொது சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:24 AM
தர்மபுரி, பொதுசுகாதார பிரிவு மூலம், செப்டிக் டேங்கர் உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் பாதுகாப்பான முறையில், செப்டிக் டேங்கை துப்புரவு செய்வது, மனித கழிவுகளை, மனிதனே கையாளுவதை தடை செய்யும் சட்ட விதிகளை பின்பற்றுவது குறித்த, விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி நகராட்சியில் நேற்று நடந்தது.
தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, முன்னிலை வகித்தார். கமிஷ்னர் சேகர் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் லட்சியவர்ணா ஒருங்கிணைத்தார். இதில், செட்டிங் டேங்கர் உரிமையாளர்கள், பயனாளர்கள் சட்டவிதிகளின் படி செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை மட்டும், செப்டிங் டேங்கை துப்புரவு செய்ய வேண்டும். துப்புரவு செய்யும் இடத்தின் விபரங்களை, செப்டிங் டேங்க் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நச்சு தொட்டிகளில் விஷவாயு குறித்த எச்சரிக்கை, பாதுகாப்பு கவசத்துடன் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட வேண்டும். பணியாளர்கள் துாய்மை பணியின் போது, மதுபானம் அருந்தக்கூடாது. தொழிலாளர்கள் பாதிப்படைந்தால் லாரி உரிமையாளர்கள் மீது, ஜாமினில் வெளிவர முடியாத முடியாத வகையில், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அப்புறப்படுத்தப்பட்ட நச்சு தொட்டி கழிவுநீரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் மற்றும் ஊருக்கு ஒதுக்கப்புறமான இடங்களில் விடக்கூடாது. இது போன்ற பணிகளில் இருந்து தவறினால், சம்மந்தபட்டவர்கள் மீது, சட்ட விதிகளின் படி, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.