/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
/
கல்குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
கல்குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
கல்குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : அக் 09, 2024 12:45 AM
கல்குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
கிருஷ்ணகிரி, அக். 9-
வேப்பனஹள்ளியில் கல்குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து, பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஓசூர் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும் குவாரியில், சாதாரண கற்கள் வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அனுமதியளிப்பது தொடர்பாக, மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
அப்போது கிராம மக்கள் கூறியதாவது:
வேப்பனப்பள்ளி ஒன்றியம், சென்னசந்திரம் பஞ்.,க்கு உட்பட்ட கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில் பெருமாளப்பன் மலை உள்ளது. மலையை ஓட்டியவாறு அரசு புறம்போக்கு நிலத்தில், 2 தனியார் கல்குவாரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இக்குவாரியில் வைக்கும் வெடிகளால், மலையில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், விவசாய நிலத்திற்கு நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குவாரிகளில் ஜல்லிகற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை தயாரிக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் துகள், புகை, துாசி ஆகியவை விளைநிலங்கள் மீதும், வீடுகளில் உள்ள உணவு பொருட்கள் மீதும் படர்கிறது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதியளிக்கக்கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கிராம மக்கள் கூறிய அனைத்து கருத்துகளை பதிவு செய்த அலுவலர்கள், இது குறித்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என கூறிச் சென்றனர்.

