/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுமேடை, பாதாள சாக்கடை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
பொதுமேடை, பாதாள சாக்கடை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பொதுமேடை, பாதாள சாக்கடை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பொதுமேடை, பாதாள சாக்கடை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 30, 2024 02:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம், அகசிப்பள்ளி பஞ்., கனகமுட்லு
கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 5.60 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமேடை, தேவசமுத்திரம் பஞ்., ஓ.எச்.டி., முதல் அன்னை சத்யா நகர் வரை, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய செயலர் சோக்காடி ராஜன், அமைப்பு-சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலர் ஆஜி, காட்டிநாயனப்-பள்ளி பஞ்., துணைத் தலைவர் நாராயணகுமார், கவுன்சிலர் மகேந்திரன்
உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி
நகராட்சி, 4வது வார்டை சேர்ந்த ராஜேஷ், சக்திவேல், கோவிந்தன், சீனிவாசன், பவித்ரன் உள்பட, 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் ரமேஷ் தலைமையில், கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர்.
முன்னாள் கவுன்சிலர்கள்
புகழேந்தி, மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை அமைப்பாளர்
நடுபையன், அம்மா பேரவை ஒன்றிய
பொருளாளர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.