/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கானம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
/
கானம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கானம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கானம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ADDED : நவ 14, 2024 06:59 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டி பஞ்., கானம்பட்டி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில், 158 பயனாளிகளுக்கு, 89.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சரயு வழங்கினார்.
அதன்படி, வருவாய்த்துறை சார்பாக, 43 பயனாளிகளுக்கு, 86 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 34 பேருக்கு நத்தம் பட்டா மாற்றம், வாரிசு, ஜாதி சான்றிதழ், சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட வழங்கல் துறை, தோட்டக்கலைத்-துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் என மொத்தம், 158 பயனாளிகளுக்கு, 89.34 லட்சம்
ரூபாய் மதிப்பி-லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.