/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரூரில் நீச்சல் குளம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
/
அரூரில் நீச்சல் குளம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரூரில் நீச்சல் குளம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரூரில் நீச்சல் குளம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2024 07:06 AM
அரூர் : அரூரில், ஆர்.டி.ஓ., அலுவலகம், டி.எஸ்.பி., மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி, அரசு சார்பில், நீச்சல் குளம் அமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தர்மபுரிக்கு அடுத்து, அரூர் பெரிய நகரமாக உள்ளது. இப்பகுதியில், வரட்டாறு தடுப்பணை, வாணியாறு அணை ஆகியவற்றுடன், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் அதிகளவில் உள்ளன. தற்போது, கோடை விடுமுறை என்பதால், மாணவர்கள் நண்பர் களுடன் நீர் நிலைகளுக்கு சென்று குளித்து வருகின்றனர். அவ்வாறு, குளிக்கும்போது, மாணவ, மாணவியர் நீச்சல் தெரியாமல், இறப்பு சம்பவங்கள் ஆண்டுதோறும், தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்கும் வகையில், தர்மபுரியில் அரசு சார்பில், ராஜாஜி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது போல், அரூரிலும் நீச்சல் குளம் அமைத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

