/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜூஜூவாடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை
/
ஜூஜூவாடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை
ஜூஜூவாடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை
ஜூஜூவாடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை
ADDED : பிப் 09, 2024 11:34 AM
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த ஜூஜூவாடியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால் போதுமான வகுப்பறை கட்டடங்கள் இல்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, கூடுதல் வகுப்பறை கட்டடம் கேட்டு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தனியார் பள்ளி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து, இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தது. அதன்படி, ஓசூர் ரவுண்ட் டேபிள், ஓசூர் லேடீஸ் சர்க்கிள், ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் மிட்டவுன் அமைப்புகள் சார்பில் வரும், 25ல் மினி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதில், கிடைக்கும் வருவாயுடன் தனியார் பள்ளி சி.எஸ்.ஆர்., நிதியையும் சேர்த்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு கூடுதல் வகுப்பறை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மாநகராட்சி கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், நகரமைப்பு தலைவர் அசோகா ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
தனியார் பள்ளி இயக்குனர் வினித் சந்திரசேகர், ரவுண்ட் டேபிள் மாவட்ட தலைவர் கவுரி சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

