/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா
/
அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா
ADDED : ஜூலை 30, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகலுார், ஓசூர் அருகே, பாகலுார் கிராம தேவதை மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, நேற்று கூழ் ஊற்றும் திருவிழா நடந்தது.
பாகலுாரிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் வேடமணிந்த பெண்ணுடன், மேள, தாளங்கள் முழங்க, மண் சட்டியில் கூழ் சுமந்து, பக்தர்கள் ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.