/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
/
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : செப் 29, 2024 01:05 AM
புரட்டாசி 2வது சனிக்கிழமை
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி, செப். 29-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருந்து, சனிக்கிழமை நாட்களில் வீடுகளில் படையலிட்டு வழிபாடு செய்து வழக்கம். இதேபோல், அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று புரட்டாசி, 2-வது சனிக்கிழமையையொட்டி, மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
ஐகொந்தம், கொத்தப்பள்ளி கிராமத்தில் மலை மீதுள்ள சீனிவாச பெருமாள் சுவாமி கோவிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோவில், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னதி, பொன்மலை சீனிவாச பெருமாள், பாலேகுளி அனுமந்தராய சுவாமி, கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள், தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள், கிருஷ்ணன் கோவில் தெரு நவநீத வேணுகோபல சுவாமி, பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், பாப்பாரப்பட்டி வேணுகோபால் சுவாமி கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு, கிருஷ்ணகிரி நகரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், பக்தர்கள் மொட்டை போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
குவிந்த பக்தர்கள்
போச்சம்பள்ளி அடுத்த, ஆனந்துார் கிராமத்தில் நேற்று பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து கருட சேவை நிகழ்வு வெகு விமர்சையாக நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி பஞ்., பெரியமலை தீர்த்தத்தில் நேற்று பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்துார், நாகரசம்பட்டி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெரியமலை தீர்த்தத்தில் புனித நீராடி பெருமாளை தரிசித்து சென்றனர்.