/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா
/
புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா
புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா
புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா
ADDED : மே 13, 2025 02:26 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் புஷ்பகிரியில் அமைந்துள்ள புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா கடந்த, 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தேர் திருவிழாவில், தினமும் ஆலய பங்கு தந்தையர்களால் நவநாள் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடந்தது.
இறுதி நாளான நேற்று முன்தினம் திருத்தேர் பவனி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஆலயத்தில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் புனித மலர்மலை மாதாவின் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்தது. வாண வேடிக்கையுடன் துவங்கிய தேர் பவனியை, மறைவட்ட முதன்மை குரு இருதயநாதன் புனித நீர் தெளித்து, மந்திரித்து துவக்கி வைத்தார்.
தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றைத் துாவி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில், கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை தேவசகாயசுந்தரம் தலைமையில் பங்கு குழுவினர் செய்திருந்தனர்.