/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
/
ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 20, 2025 12:54 AM
கிருஷ்ணகிரி, லோக்சபா எதிர்கட்சித்தலைவர் ராகுலின், 55வது பிறந்த நாள் விழா, காவேரிப்பட்டணத்தில் நேற்று நடந்தது. சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜாவித்கான் தலைமை வகித்தார்.
இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் பங்கேற்றார். ராகுலின் பிறந்த நாளையொட்டி, விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அன்னை அன்பு இல்ல மாணவர்கள், 48 பேருக்கு நோட்டு புத்தகங்களை எம்.பி., வழங்கினார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அம்சா குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., தலைவர் முரளிதரன் தலைமையில் கட்சியினர்,ஓசூர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* போச்சம்பள்ளி, நான்கு ரோடு சந்திப்பில், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ஊத்தங்கரையில், காங்., மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் எம்.பி., கோபிநாத் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.