/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மர்ம பொருட்கள் பதுக்கியதாக புகார்; கி.கிரி தொழிலதிபர் வீட்டில் 'ரெய்டு'
/
மர்ம பொருட்கள் பதுக்கியதாக புகார்; கி.கிரி தொழிலதிபர் வீட்டில் 'ரெய்டு'
மர்ம பொருட்கள் பதுக்கியதாக புகார்; கி.கிரி தொழிலதிபர் வீட்டில் 'ரெய்டு'
மர்ம பொருட்கள் பதுக்கியதாக புகார்; கி.கிரி தொழிலதிபர் வீட்டில் 'ரெய்டு'
ADDED : டிச 27, 2024 07:42 AM
கிருஷ்ணகிரி: சட்டத்திற்கு புறம்பாக, 10க்கும் மேற்பட்ட பொருட்களை பதுக்கியிருப்பதாக வந்த புகாரையடுத்து, கிருஷ்ணகிரி பெண் தொழிலதிபர் வீட்டில், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் தொழிலதிபர் அனுராதா, 37. பெத்ததாளப்பள்ளி பஞ்., இந்திரா நகரில் அபார்ட்மென்ட் கட்டி, வீடுகளை வாடகைக்கு விட்டும், சிறு தொழில்கள் செய்தும் வருகிறார். இந்திரா நகர் பகுதியில் உள்ள அவரது வீடு, குடோன் உள்ளிட்டவைகளில், நேற்று காலை சேலம் மண்டல ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., (பொ) வேலு மற்றும் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி ஆகியோர் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். ரைஸ் புல்லிங், சிலை கடத்தல், வெடி மருந்து பொருட்கள் பதுக்கல் ஆகிய வழக்குகளில் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், சந்தேகத்திற்கிடமான, 10 மர்ம பொருட்கள் இவரது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும், கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடந்தது. நேற்று காலை, 8:00 மணி முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில், எந்த மர்ம பொருளும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் கூறினர்.
குற்றம் சாட்டப்பட்ட அனுராதா மீது, மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக, உறுதியாக கிடைத்த தகவல் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவு பெற்று, சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் கூறினர். இன்ஸ்பெக்டர்கள் குலசேகரன், செந்தில்குமார், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார், பெத்ததாளப்பள்ளி வி.ஏ.ஓ., குப்த பிரவர்த்தனன் உள்ளிட்டோர் சோதனையின்போது உடனிருந்தனர்.

