/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடத்துார், அரூரில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
/
கடத்துார், அரூரில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
கடத்துார், அரூரில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
கடத்துார், அரூரில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 13, 2025 01:22 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துாரில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து, மழை பொழிந்தது. இதில் கடத்துார், ஒடசல்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* அச்சல்வாடி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, வாச்சாத்தி, பேதாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 5:30 மணி முதல், மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. அரூர் நகரில் சாரல்மழை பெய்தது. மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.