/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் ஓடும் மழை நீர் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் ஓடும் மழை நீர் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 29, 2024 12:59 AM
சாலையில் ஓடும் மழை நீர்
வாகன ஓட்டிகள் அவதி
போச்சம்பள்ளி, அக். 29-
போச்சம்பள்ளியிலிருந்து காரிமங்கலம் செல்லும் சாலையில், குள்ளனுார் அடுத்த, ஜம்புகுட்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் கடந்த, 4 நாட்களாக மழைநீர் சாலையில் தேங்கி செல்கிறது. இதற்கு, 10 அடி தொலைவிலுள்ள தரை பாலம் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி, சாலையில் தண்ணீர் செல்கிறது. நாள் ஒன்றுக்கு, 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் கார், டூவீலர்கள் கடந்து செல்லும் நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தரைபாலத்தில் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ள பகுதியை சீரமைத்து, சாலையில் தண்ணீர் செல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.