/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்
/
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்
ADDED : மே 19, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரியில் அதிகபட்ச-மாக, 50.20 மி.மீ., மழை பதிவானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலும் மாலையில் கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை, கிருஷ்ணகிரி, போச்சம்-பள்ளி, ராயக்கோட்டை உட்பட
மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், சோமார்பேட்டை சர்வீஸ் சாலை, மற்றும் தானம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு-களின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வர அவதியுற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி
நிலவரப்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில், 50.20 மி.மீ., மழை பதிவானது.
அதேபோல், கே.ஆர்.பி., அணை 45.20, தேன்கனிக்கோட்டை, 25, போச்சம்பள்ளி, 20, ராயக்கோட்டை, 20, பாரூர், 15.80, பெணுகொண்டபுரம், 15.30, தளி, 15, கெலவரப்பள்ளி அணை, 15, நெடுங்கல், 14.20, ஓசூர், 14, ஊத்தங்கரை, 13.20, அஞ்செட்டி, 10.80, சின்னாறு அணை, 10, சூளகிரி, 8 மி.மீ., என மொத்தம், 291.70 மி.மீ., அளவில் மழை பதிவானது.