/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழை நீர்
/
போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழை நீர்
ADDED : செப் 22, 2025 02:06 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
கடந்த, 2 நாட்களாக போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அன்றாட பணிகள் மற்றும் அவசர தேவைகளுக்கு செல்லும் மக்கள், கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.