ADDED : ஆக 21, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, காங்., கமிட்டி அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவின், 82வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
இதையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். துணை தலைவர் ரகமத்துல்லா வர-வேற்றார். மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, பொது செய-லாளர் டாக்டர் தகி ஆகியோர், ராஜிவ் படத்திற்கு மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர். சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் மூயீன் நன்றி கூறினார்.
