/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆஞ்சநேயர் கோவிலில் ரதசப்தமி விழா
/
ஆஞ்சநேயர் கோவிலில் ரதசப்தமி விழா
ADDED : பிப் 17, 2024 12:46 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, பாத்தக்கோட்டா கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமையான சீத்தாராம ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ரதசப்தமி விழா நேற்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கிராமத்தை சுற்றி உற்சவ மூர்த்தி திருவீதி உலா வந்தது. ஏராளமான கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொழிற்சங்கங்கள் ஓசூரில் சாலை மறியல்
ஓசூர்: மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மத்திய அரசை கண்டித்து, தொ.மு.ச., - ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - டபிள்யூ.பி.டி.,யு.சி., உட்பட பல்வேறு தொழிற்சங்கள் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காந்தி சிலை அருகே, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டம் நடந்தது.
இ.கம்யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா, தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி., மாதையன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பஸ் மோதி தொழிலாளி பலி
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வெள்ளையம்பதியை சேர்ந்தவர் முருகன், 63. இவர் பனைமரம் ஏறும் தொழிலாளி. நேற்று காலை டி.வி.எஸ்., ப்ளசர் பைக்கில், நாகரசம்பட்டி நோக்கி கரடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். மாரண்டஹள்ளியிலிருந்து, திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ் முருகன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.