/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிப்பறையில் வைத்திருந்த ரேஷன் உணவு பொருட்கள்
/
கழிப்பறையில் வைத்திருந்த ரேஷன் உணவு பொருட்கள்
ADDED : ஜூலை 24, 2025 12:32 AM
ஓசூர்:ஓசூரில், கழிப்பறைகளில் ரேஷன் பொருட்கள் வைத்திருந்ததை அறிந்த மக்கள், கடை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது-.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய டெம்பிள் ஹட்கோ பகுதியில் செயல்பட்டு வந்த, ஆறாம் நம்பர் ரேஷன் கடை கட்டடம் மிகவும் மோசமாக இருந்தது. அதனால், உழவர் சந்தையை ஒட்டிய வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறைக்கு சொந்தமான மலர் வணிக வளாகத்திலுள்ள, 14 எண் கொண்ட கடையில் தற்காலிகமாக செயல்படுகிறது.
இதை வாடகைக்கு எடுத்துள்ள தனிநபரிடமிருந்து, அரசு விதியை மீறி, உள்வாடகைக்கு எடுத்து, ரேஷன் கடையை நடத்தி வருகின்றனர். கடை விற்பனையாளராக முத்துமாதேவன் உள்ளார்.
இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய வந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை, மலர் வணிக வளாகத்திலுள்ள, இரு கழிப்பறைகளில் வைத்திருந்தனர். இதையறிந்த பொதுமக்கள் நேற்று மாலை ரேஷன் கடை முன் திரண்டனர். ஆனால், தங்களிடம் சாவி இல்லை எனக்கூறி, கடையை திறந்து காட்ட ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
கழிப்பறை முன், மனிதக்கழிவுகள் தேங்கி நின்றன. சுகாதாரமற்ற இடத்தில் பொருட்களை வைத்து, எப்படி வழங்கலாம் என, மக்கள் கேள்வி எழுப்பினர். பின், நீண்ட நேரம் மக்கள் நின்றிருந்தும், வட்ட வழங்கல் அலுவலர் உட்பட எந்த அதிகாரிகளும் விசாரணைக்கு வரவில்லை.