/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குப்பநத்தம் கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு
/
குப்பநத்தம் கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு
ADDED : ஆக 26, 2025 01:39 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, நடுப்பட்டி பஞ்., குப்பநத்தம் கிராம மக்கள் புதிய ரேஷன்கடை கட்டித்தர கோரி, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 2024- -25ம் ஆண்டுக்கான, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். பணிகள் முடிந்து நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய ரேஷன் கடை கட்டடத்தை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருக்கு பகுதி மக்கள் நன்றி தெரிவித்துனர்.
இதில், அ.தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் இளையராஜா, சிறுபான்மை பிரிவு பியாரேஜான், முன்னாள் பஞ்., தலைவர்கள் ஜீவானந்தம், குப்புசாமி உள்பட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

