/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தவற விட்ட தங்க நகைகள் மீட்பு; ஒப்படைத்த ரயில்வே போலீசார்
/
தவற விட்ட தங்க நகைகள் மீட்பு; ஒப்படைத்த ரயில்வே போலீசார்
தவற விட்ட தங்க நகைகள் மீட்பு; ஒப்படைத்த ரயில்வே போலீசார்
தவற விட்ட தங்க நகைகள் மீட்பு; ஒப்படைத்த ரயில்வே போலீசார்
ADDED : செப் 09, 2024 07:08 AM
ஓசூர்: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை செம்பூர் ஷிவ்புரி காலனியை சேர்ந்தவர் தேவானந்த் பி.சவான், 61; இவர், நேற்று முன்தினம் தன் மனைவியுடன், லோக்மான்ய திலக் டெர்மினல் ஸ்டேஷனில் இருந்து, கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி., பெட்டியில் பயணித்தார். நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினார். அவர் மனைவி தன் கைப்பையை ரயிலில் மறந்து விட்டிருந்தார். அதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 50 கிராம் தங்க நகை, ஒரு மொபைல்போன், விலையுயர்ந்த வாட்ச் மற்றும் 13,000 ரூபாய் இருந்தது.
ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் புகார் செய்தனர். ரயிலில் ரோந்து பணியிலிருந்த முதல்நிலை காவலர் சென்னகேசவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கைப்பையை மீட்டார். பின், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்ற பின், அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் கைப்பை ஒப்படைக்கப்பட்டது. அதன் பின், தேவானந்த் பி.சவான், தர்மபுரிக்கு வந்து கைப்பையை பெற்றுக் கொண்டார்.