/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணையாற்றில் நீர் திறப்பு குறைப்பு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை 'வாபஸ்'

ADDED : அக் 31, 2024 06:47 AM
ஓசூர்,தென்பெண்ணையாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு, 1,000 கன அடிக்கு கீழ் குறைக்கப்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.
கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. மழை குறைந்ததால் படிப்படியாக நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,459 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில், 1,399 கன அடி நீர் திறக்கப்பட்டது.
அதனால் ஆற்றில் ரசாயன நுரையுடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 780 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.34 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில், 720 கன அடி, வலது, இடது கால்வாயில், 60 கன அடி என மொத்தம், 780 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து கடந்த, 10 நாட்களாக, 1,000 கன அடிக்கு மேல் தென்பெண்ணையாற்றில் நீர் சென்றதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நேற்று ஆற்றில், 720 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.