/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மண்டல ஆலோசனை கூட்டம்
/
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மண்டல ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 17, 2024 01:10 AM
தமிழக விவசாயிகள் சங்கத்தின்
மண்டல ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி, அக். 17-
கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பழனி தலைமை வகித்தார்.
மாநில குழுத்தலைவர் லகுமய்யா, மாவட்ட செயலாளர்கள் வேலுார் பாபு, திருப்பத்துார் முல்லை, தர்மபுரி சின்னசாமி, மாவட்ட தலைவர் சிவராஜ், பொருளாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தஞ்சாவூரில் நடக்க உள்ள மாநில மாநாட்டிற்கான தேதியை நிர்ணயிப்பது, மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தொண்டர்கள் மற்றும் விவசாயிகளை அழைத்துச் செல்வது, மாநாட்டிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வது, மாநாட்டில் பங்கு பெறும் அனைவருக்கும் பாதுகாப்பு பணியை எவ்வாறு மேற்கொள்வது, என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, அலுவலக பொறுப்பாளர் ராமசந்திரன் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.