ADDED : டிச 05, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டமேடு பகுதியில் மழை வெள்-ளத்தால் சேதமான சாலை, விவசாய பயிர்கள்,
செம்மாண்ட-குப்பம், எஸ்.கொட்டாவூரில் இடிந்த வீடுகள், மற்றும் மழை பாதித்த பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி,
அலமேலுபுரம், பூத-நத்தம், குண்டல்மடுவு, இருளர் காலனி, வெங்கடசமுத்திரம் அண்ணா நகர், வாணியாறு
அணை, ஆகிய பகுதிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,--- கோவிந்தசாமி பார்வையிட்டார். தொடர்ந்து, இருளர் காலனி,
பாப்பிரெட்டிப்பட்டியில் மழையால் பாதிக்கப்-பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண
தொகுப்புகளை வழங்கினார். இதில் தாசில்தார் வள்ளி, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், நகர செயலாளர்
தென்னரசு, ரவி, புரட்சிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.