ADDED : அக் 15, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிவம்பட்டி அடுத்த, கிருஷ்ணாபுரம் கிராமத்தில், காவேரிப்பட்டணத்தில் இருந்து காக்கங்கரை வழியாக திருப்பத்துார் செல்லும் சாலையில், சரவணன், சக்திவேல், ராஜிவ்காந்தி ஆகிய மூவரும், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீடு கட்டி, 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தனர்.
நேற்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் நேதாஜி மற்றும் மத்துார் போலீசார், 50க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன.

