/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
/
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : பிப் 10, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தளி ஒன்றிய கமிட்டி சார்பில், குருபரப்பள்ளி கிராமத்தில் அரசியல் பயிற்சி முகாம் மற்றும் பேரவை கூட்டம் நடந்தது. புருசோத்தமரெட்டி தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்க உரையாற்றினார். சுதந்திர போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில், மாநில செயலாளர் சிங்காரவேலன் பேசினார்.
தொடர்ந்து, தளி ஒன்றிய கமிட்டியின், 23 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், 3 ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.