/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எளிய நடைமுறையுடன் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கு கோரிக்கை
/
எளிய நடைமுறையுடன் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கு கோரிக்கை
எளிய நடைமுறையுடன் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கு கோரிக்கை
எளிய நடைமுறையுடன் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கு கோரிக்கை
ADDED : நவ 10, 2025 01:59 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அத்துக்கட்டு எனப்படும் எருது விடும் விழா நடத்தப்படுகிறது. சமீப காலமாக எருது விடும் விழாக்களுக்கு, சிக்கலான விதிமுறைகளை கடைபிடிக்க, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்துவதால், பண்டிகைகள் நடத்த மக்கள் சிரமப்படுகின்றனர்.
அடுத்தாண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அதை காரணம் காட்டி, எருது விடும் விழாவிற்கு அரசு அனுமதி மறுக்கலாம் என்ற தகவல் பரவிய நிலையில், ஓசூர் அருகே சீக்கனப்பள்ளியில், அத்துக்கட்டு நலசங்கம் சார்பில், நேற்று நாட்டு இன மாடுகளை காப்போம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார் மாவட்ட மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா சங்க தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போலவே, எருது விடும் விழாவிற்கென தனியாக அரசாணை வெளியிட வேண்டும். தேர்தலை காரணம் காட்டி அனுமதி மறுக்கக்கூடாது. எளிமையான நடைமுறைகளை பின்பற்றி, காலை, முதல் மாலை வரை, எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

