ADDED : நவ 10, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் குருதிக்கொடை பாசறை சார்பில், கோவை கல்லுாரி மாணவிக்கு நீதி கேட்டு, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. குருதிக்கொடை பாசறை மாநில செயலாளர் சிலம்பரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வேலை பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கோவை சட்டக்கல்லுாரி மாணவி பாலியல் சம்பவத்திற்கு இதுவரை வாய்த்திறக்காமல் மவுனம் காக்கும் தமிழக அரசே, மத்திய அரசே, புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கான நீதி வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

