/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர்களின் வீடு தேடி ஓட்டு கேட்க தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
/
வாக்காளர்களின் வீடு தேடி ஓட்டு கேட்க தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
வாக்காளர்களின் வீடு தேடி ஓட்டு கேட்க தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
வாக்காளர்களின் வீடு தேடி ஓட்டு கேட்க தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
ADDED : ஏப் 16, 2024 07:01 AM
கிருஷ்ணகிரி : வாக்காளர்கள் வீடு தேடி சென்று, ஓட்டு கேட்டு, வெற்றியை தேடி தாருங்கள் என, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.கிருஷ்ணகிரி, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை நாடு போற்றுகிறது. நம் திட்டங்களை பற்றி அண்டை மாநிலங்கள் பேசுகின்றன. பல மாநிலங்கள் நம் திட்டங்களை பின்பற்றுகின்றன. நாளை நாடு முழுவதும் இத்திட்டங்கள் செயல்படுத்தும் வகையில், 'இண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நம் கூட்டணியில், கிருஷ்ணகிரியில், காங்., வேட்பாளர் கோபிநாத் களம் காண்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் கூட்டணி வேட்பாளர் கோபிநாத்தை வெற்றி பெற செய்வதுதான்.
தமிழகத்தின் சிறப்பான திட்டங்கள், நாடு முழுவதும் செல்ல, வாக்காளர்களின் வீடு தேடி நிர்வாகிகள் செல்ல வேண்டும். தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, காலை உணவுத்திட்டம், புதுமை பெண் திட்டம், தங்க புதல்வன் திட்டம், இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு கேட்க வேண்டும். மேலும், மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைந்தால், வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்திற்கு ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதையும் எடுத்துக்கூறி, வெற்றிக்காக உழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

