/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிக்க வேண்டுகோள்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிக்க வேண்டுகோள்
ADDED : டிச 23, 2024 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின், 37ம் ஆண்டு நினைவு நாள் நாளை (டிச., 24) அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, கிழக்கு, அ.தி.மு.க., சார்பில், மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் எம்.ஜி.ஆரின் உருவ சிலை, உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதில், இன்னாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகளும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

