/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தரைப்பால பள்ளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவை அகற்ற கோரிக்கை
/
தரைப்பால பள்ளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவை அகற்ற கோரிக்கை
தரைப்பால பள்ளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவை அகற்ற கோரிக்கை
தரைப்பால பள்ளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவை அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 01, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, தரைப்பால பள்ளத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனே அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த குரபரப்பள்ளி மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையோரம் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் கட்டும்போது, சாலை குறுக்கே தரைப்பாலம் அமைத்தனர். இதேபோன்று தேசிய நெடுஞ்சாலையோரம் அமைத்துள்ள தரைப்பாலங்களை கால்வாயாக இணைக்காமல் விட்டு விட்டனர். இதனால் இந்த தரைப்பாலத்தில் உள்ள பெரிய பள்ளங்களில்
கழிவுநீர் தேங்கியது.
ஆனால், தற்போது பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால், நாளடைவில் இப்பள்ளங்களில் அதிகளவில், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளது. ஆண்டுக்கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கிய கழிவுகளை உடனே அகற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.