/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நகை பறித்து சென்ற2 பேருக்கு 'காப்பு'
/
நகை பறித்து சென்ற2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 20, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்துாரை சேர்ந்தவர் சின்னப்பையன், 32, பேக்கரி மாஸ்டர். இவர் கடந்த மார்ச், 23ல், அம்மனேரி கூட்ரோடு அருகில், அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர்களான மாரியப்பன், 33, சண்முகம், 32, ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்
களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
மது போதை தலைக்கேறிய நிலையில், சின்னப்பையனை தாக்கி, அவர் அணிந்திருந்த, 2.5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மற்ற இருவரும் தப்பினர். சின்னப்பையன் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அவர்களை தேடி வந்தனர். நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் நின்ற மாரியப்பன், சண்முகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

