/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதையில் பைக் ஓட்டிய இரண்டு பேருக்கு காப்பு
/
போதையில் பைக் ஓட்டிய இரண்டு பேருக்கு காப்பு
ADDED : ஜூலை 09, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் போலீசார், ராயக்கோட்டை சாலையில் உள்ள லுக் இந்தியா கம்பெனி அருகே வாகன சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியாக மதுபோதையில் ஒருவர் ஹோண்டா யுனிகார்ன் பைக்கையும், மற்றொருவர் ஹோண்டா சைன் பைக்கையும் ஓட்டி சென்றனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, ஓசூர் அருகே ஜொனபெண்டாவை சேர்ந்த ஸ்ரீதர், 28, ஓ.காரப்பள்ளியை சேர்ந்த சின்னராஜூ, 39, என்பது தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்தனர்.