/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனவரை பணி செய்ய விடாமல் தடுத்த தொழிலாளிக்கு 'காப்பு'
/
வனவரை பணி செய்ய விடாமல் தடுத்த தொழிலாளிக்கு 'காப்பு'
வனவரை பணி செய்ய விடாமல் தடுத்த தொழிலாளிக்கு 'காப்பு'
வனவரை பணி செய்ய விடாமல் தடுத்த தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஞ்செட்டி, ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்தில், தக்கட்டி வனவராக பணியாற்றி வருபவர் ஆனந்த், 29. கடந்த, 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, தக்கட்டி வனத்துறை சோதனைச்சாடியில் பணியில் இருந்தபோது. அங்கு மதுபோதையில் வந்த, பிலிகுண்டுலு கிராமத்தை சேர்ந்த நர்சரி பண்ணை தொழிலாளி வசந்தகுமார், 34, என்பவர், வனவர் ஆனந்திடம் தகராறு செய்து, கையால் தாக்கி அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
வனவர் ஆனந்த் புகார் படி, அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிந்து, வசந்தகுமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் தேன்கனிக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமினில் விடுவித்தனர்.