/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொத்தடிமைகளாக இருந்த வட மாநிலத்தவர் 40 பேர் மீட்பு
/
கொத்தடிமைகளாக இருந்த வட மாநிலத்தவர் 40 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக இருந்த வட மாநிலத்தவர் 40 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக இருந்த வட மாநிலத்தவர் 40 பேர் மீட்பு
ADDED : ஏப் 07, 2024 03:25 AM
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே கொத்தடிமைகளாக இருந்த, வட மாநில தொழிலாளர்கள், 40 பேர் மீட்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், வட மாநில தொழிலாளர்கள் பலர், குறைந்த ஊதியத்தில் பணிக்கு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி தாசில்தார் சுப்பிரமணி தலைமையில், ஜிஞ்சுப்பள்ளி வி.ஏ.ஓ., கிருஷ்ணன் மற்றும் குருபரப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் அப்
பகுதியில் சோதனை நடத்தினர். இதில், ஒரு செங்கல் சூளையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, 37 பேரும், பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 3 பேரும் என, 40 வட மாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணியில் இருந்தது தெரியவந்தது. இவர்களில், 18 பேர் பெண்கள். இவர்கள், 6 மாதங்களாக கூலி தொழிலாளர்களாக பணியில் இருந்துள்ளனர். அவர்களை போலீசார் மீட்டனர்.
செங்கல் சூளை உரிமையாளரான, சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த ராஜா, 55, உட்பட மேலும் சிலர் சேர்ந்து, வட மாநில தொழிலாளர்களை, கொத்தடிமைக்காக பணியில் சேர்த்தது தெரியவந்தது. வி.ஏ.ஓ., கிருஷ்ணன் புகார்படி, ராஜா, ஆனந்த பத்மநாபன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சுப்பிரமணியன், 50, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் ஜடவ் ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

