/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
30 ஆண்டுக்கு மேலாக பஸ் வசதி இல்லாத 5 கிராம மக்கள் அவதி
/
30 ஆண்டுக்கு மேலாக பஸ் வசதி இல்லாத 5 கிராம மக்கள் அவதி
30 ஆண்டுக்கு மேலாக பஸ் வசதி இல்லாத 5 கிராம மக்கள் அவதி
30 ஆண்டுக்கு மேலாக பஸ் வசதி இல்லாத 5 கிராம மக்கள் அவதி
ADDED : நவ 23, 2024 01:38 AM
30 ஆண்டுக்கு மேலாக பஸ் வசதி
இல்லாத 5 கிராம மக்கள் அவதி
போச்சம்பள்ளி, நவ. 23-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அகரம் பிரிவு சாலையிலிருந்து செல்லும் பட்டகரஹள்ளி, குடிமேனஹள்ளி, தேவீரஹள்ளி, தாமோதரஹள்ளி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் மக்கள் பல்வேறு பணிகளுக்காக காரிமங்கலம், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்குள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பஸ் வசதி கோரி பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், பஸ் வசதி செய்து தரவில்லை.
இது குறித்து, தேவீரஹள்ளயை சேர்ந்த முருகையன், 51, என்பவர் கூறுகையில், ''1994ல் போச்சம்பள்ளி தாலுகாவாக பிரிக்கப்பட்டது. அதில் எங்கள் கிராமங்கள் ஒருங்கிணைந்து, 30 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், இதுவரை எங்கள் பகுதிக்கு பஸ் வசதி செய்து தரவில்லை. அவசர தேவைகளுக்கு வெளியூர் செல்ல கடும் சிரமப்
படுகிறோம்'' என்றார்.
தேவீரஹள்ளியை சேர்ந்த மாது, 57, என்பவர் கூறுகையில், ''எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் கல்லுாரி, பள்ளி, மாணவ, மாணவியர் அதிகம் பேர் போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் பஸ் வசதி இல்லாததால் இரு சக்கர வாகனங்கள், நடந்து சென்று தட்ரஹள்ளி, அகரம் பகுதியிலிருந்து பஸ்ஸில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தமிழக அரசு, மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தில், பல்வேறு பகுதிகளில் டவுன் பஸ்களை இயக்கி உள்ளது. எங்கள் பகுதிக்கும், அதேபோல் பஸ் வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்,'' என்றார்.

