/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை பொதுமக்கள் தொடர் மழையால் அச்சம்
/
ஊத்தங்கரை பொதுமக்கள் தொடர் மழையால் அச்சம்
ADDED : டிச 13, 2024 09:04 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கடந்த 1ல், பெய்த கன மழையால், பல குடியி-ருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. டூரிஸ்ட் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை நீரால் ஏற்பட்ட இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல், ஊத்தங்கரை பகுதி மக்கள் தவித்து வரும் நிலையில், நேற்று அதிகாலை முதல் ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், காரப்-பட்டு, சிங்காரப்பேட்டை, கல்லாவி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கன மழை பெய்தது. இதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அண்ணா நகர், காமராஜ் நகர்,நேரு நகர், ஜீவா நகர் ஆகிய பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்-பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்-கப்பட்டது போல், மீண்டும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்-ளனர்.