/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செங்கல் சூளை புகையால் குடியிருப்புவாசிகள் அவதி
/
செங்கல் சூளை புகையால் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : ஜூலை 02, 2025 01:49 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கதவனி டோல்கேட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். அருகிலுள்ள வீடுகளில் இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல் சூளைகள் முறையாக புகைபோக்கி அமைத்து, போக்குவரத்துக்கும், அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் செங்கல் சூளைகள் செயல்பட, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.