/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முடக்கி வைத்துள்ள அகவிலைப்படியை அரசு விரைவில் வழங்க கேட்டு தீர்மானம்
/
முடக்கி வைத்துள்ள அகவிலைப்படியை அரசு விரைவில் வழங்க கேட்டு தீர்மானம்
முடக்கி வைத்துள்ள அகவிலைப்படியை அரசு விரைவில் வழங்க கேட்டு தீர்மானம்
முடக்கி வைத்துள்ள அகவிலைப்படியை அரசு விரைவில் வழங்க கேட்டு தீர்மானம்
ADDED : அக் 28, 2024 04:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்ட ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவ-லர்கள் சங்க, 8ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 70 மற்றும், 80 வயது அடைந்த ஓய்வூதியர்களுக்கு தலா, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி, முடக்கி வைத்துள்ள அகவிலைப்படியை விரைவில் வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதியை, 50,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தமிழக அரசு பஸ்களில் பயணிக்க, 50 சதவீத கட்-டண சலுகை, சென்னையில் வழங்குவது போல், தமிழகம் எங்கும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்-வூதியர்கள் பணிக்கொடை தொகை, 15 ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இதை, 11 ஆண்டாக குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை தமிழக ஓய்வூதியர்க-ளுக்கும் அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக செயலாளர் ரஹீப்ஜான் செயலர் அறிக்கை வாசித்தார். ஐ.வி.டி.பி., தொண்டு நிறுவனத் தலைவர் குழந்தை பிரான்சிஸ், ஆண்டு விழா மலரை வெளியிட்டு, மூத்தோர்களை கவுரவித்தார். தர்மபுரி மாவட்ட தலைவர் தங்கராசு உள்பட பலர் பேசினர். தணிக்கையாளர் ஜனார்தனராவ் நன்றி கூறினார்.