/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி சிட்டிங் எம்.பி.,க்கு மீண்டும் 'சீட்' வழங்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

ADDED : பிப் 18, 2024 10:12 AM
கிருஷ்ணகிரி: நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட சிட்டிங், காங்., - எம்.பி., செல்லக்குமாருக்கு மீண்டும், 'சீட்' வழங்ககூடாது என, காங்., நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே தனியார் மஹாலில், கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காங்., மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ரஹமதுல்லா வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாராயணமூர்த்தி, சுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளை விட வலுவாக இருந்த, காங்., கட்சி தற்போது சிதறியுள்ளது. கடந்த, 5 ஆண்டுகளில் பூத் கமிட்டி அமைப்பதற்கு கூட ஆட்கள் இல்லை. வேறு மாவட்டத்தை சேர்ந்த செல்லக்குமாரை எம்.பி., ஆக்கியதால், பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளோம். காவேரிப்பட்டணம், காங்., அலுவலகமே மூடப்பட்டுள்ளது. எனவே, வரும் லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை மீண்டும், காங்., கட்சிக்கு ஒதுக்கினாலும் செல்லக்குமாருக்கு, 'சீட்' வழங்கக்கூடாது என பேசினர். இது குறித்த, 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநில சிறுபான்மைபிரிவு துணைத்தலைவர் ஜாவித்கான், மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், மாநில ராகுல் பேரவை தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட மீனவரணி அமைப்பு தலைவர் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷபீக் அஹமது உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட காங்., கட்சியனர் கலந்து கொண்டனர்.