/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி நகராட்சியுடன் 6 பஞ்சாயத்தை இணைக்க தீர்மானம்
/
கி.கிரி நகராட்சியுடன் 6 பஞ்சாயத்தை இணைக்க தீர்மானம்
கி.கிரி நகராட்சியுடன் 6 பஞ்சாயத்தை இணைக்க தீர்மானம்
கி.கிரி நகராட்சியுடன் 6 பஞ்சாயத்தை இணைக்க தீர்மானம்
ADDED : அக் 07, 2024 03:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 15வது வட்டக்கிளை மாநாடு நேற்று நடந்தது. வட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரன், இணை செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் நந்தகுமார், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பொதுமக்களுக்கு இடையூராக அமைந்துள்ள டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியுடன் தற்போது அறிவித்துள்ள, 3 பஞ்சாயத்துடன் மேலும், 3 பஞ்.,களை இணைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அரசு தங்கும் மகளிர் விடுதி கட்டித்தர
வேண்டும். தமிழக முதல்வர் கொடுத்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கிராம இளைஞர்களுக்கு, காலமுறை ஊதிய
நடைமுறையில் பணி வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு, கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

