/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனவிலங்குகளால் உயிரிழப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க தீர்மானம்

ADDED : ஜன 09, 2024 10:37 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வெலகலஹள்ளி அருகே உள்ள கொத்தளம் கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் துவக்க விழா மற்றும் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், விவசாய சங்கத்தின் கிளைச்சங்க பெயர் பலகையை திறந்து வைத்து சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்து கடந்த, 57 ஆண்டுகளாக வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியான விலையும், ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். அனைத்து டோல்கேட்டிலும் விவசாயிகள் கொண்டு செல்லும் விளைப்பொருள்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.