/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்கள் பணியாற்றும் இடங்களில் புகார் கமிஷன் அமைக்க தீர்மானம்
/
பெண்கள் பணியாற்றும் இடங்களில் புகார் கமிஷன் அமைக்க தீர்மானம்
பெண்கள் பணியாற்றும் இடங்களில் புகார் கமிஷன் அமைக்க தீர்மானம்
பெண்கள் பணியாற்றும் இடங்களில் புகார் கமிஷன் அமைக்க தீர்மானம்
ADDED : ஆக 07, 2025 01:00 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க, 14வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் கவிமணிதேவி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட செயலாளர் ராதா, மாநில துணைத்தலைவர் கிரிஜா ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் ராணி நன்றி கூறினார்.
மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு பொது இடங்களிலும், பள்ளிகள், கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பெண்கள் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும், புகார் கமிஷன் ஒன்று அரசால் அமைக்க வேண்டும். கவுரவக் கொலை, வரதட்சணை மரணம், கட்டாய திருமணம் போன்ற வன்முறைகள் சமூக செயல்முறைகளாக உள்ளன. பெண்களை கடத்துதல், கட்டாய விபசாரம் போன்ற பல வன்முறைகள் கட்டமைக்கப் படுவதை முற்றிலும் தடுத்த நிறுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். சுய உதவிக்குழு பெண்களுக்கு, 4 சதவீத வட்டியில் வங்கிக்கடன் வழங்க வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடி வசூலை தடுத்த நிறுத்த வேண்டும். கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை ரயில் வழித் தடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.