/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 03:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஓய்வுபெற்ற அலு-வலர் சங்கத்தினர், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெகன்நாதன் தலைமை வகித்தார். கிளை தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார்.
செயலாளர் கதிர்வேலு முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் மாதன், துணைத்தலைவர் ராஜாமணி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். பொருளாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், 2016க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூ-திய முரண்பாட்டை களைய வேண்டும். நிலுவையிலுள்ள அகவி-லைப்படி தொகையை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி-யின்படி, 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெற்ற ஓய்வூதியம் ஒப்ப-டைப்பு தொகையை திரும்ப செலுத்தும் காலத்தை, 12 ஆண்டுக-ளாக குறைக்க வேண்டும். பயனாளிகளுக்கு காசில்லா மருத்துவ சிகிச்சையை உறுதி படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்-படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்-வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி, மருத்துவப்படியை மாதந்தோறும், 1,000 ரூபாய், குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர் குறைதீர் கூட்டங்களை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்த ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்-பினர்.

